ஜே வி பியின் பிரசாரசெயலர் விமல்வீரவன்சவின் கட்சி உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக கட்சி தரப்புகள் தெரிவி;த்துள்ளன. கட்சியின் அரசியல் பிடம் இன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. அண்மையில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் அணியின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என கோரியிருந்தார் எனினும் அதனை விமல் வீரவன்ச பொதுக்கூட்டம் ஒன்றில் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்’குள் தீவிரமாகி வந்தது. இந்தநிலையிலேயே இன்று அவரி;ன் கட்சி உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 4 April 2008
ஜே வி பி விமல் வீரவன்சவின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment