Friday, 4 April 2008

வாகரை: கலைபடும் பறவைகளாய் அலைபடும் மக்கள்!


வாகரை என்றதும் எனது ஞாபகத்திற்கு வருவது 1960களில் பறவைகளைப் பார்த்து ரசிக்கப் பேர்போன ஒரு இடம் என்பது தான். அக்காலப் பகுதியில் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கு மிடையிலான ஏ-15 வீதியூடான பயணம் இலகுவானதாக இருந்தது. சன சந்தடி, ஆரவாரங்களற்ற மிக அழகு வாய்ந்ததொரு இடமாக அது இருந்தது. அப்பகுதியில் நீர்ப் பறவைகள் மிகுதியாகக் காணப் பட்டன. ஆனால், 1980 களில் பிறந்த தலைமுறையினரைப் பொறுத்த வரையில், வாகரை வெறுமனே யுத்தத்தினால் சின்னா பின்னமாகிப் போய்விட்ட ஒரு பிரதேசம் என்பதே அவர்களது மனதளவில் நிலைத்து நிற்கும் பதிவாக இருக்க முடியும். மேலும் டிசம்பர் 2004இல் சுனாமி காரணமாக வாகரை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. டிசம்பர் 2006இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் "வெற்றி யீட்டியதை" அடுத்து அது குடிமக்களற்றதொரு பிரதேசமாகவும் மாறியது.

வாகரையின் பூர்வீககுடிகளாக சிறிய தொகையிலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் மரமுந்திரி கைச் செய்கையாளர் ஆகியோர் இருந்தனர். எப்போதுமே இப் பிரதேசம் மறக்கப்பட்டதொரு பிரதேசமாகவே இருந்து வந்துள் ளது. அரசாங்கம், அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள், அரசியல் வாதிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சகலவற்றாலுமே இது மறக்கப்பட்ட தொரு பிரதேசமாக இருந்தது. அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களால் எத்த கைய சேவைகளுமே அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட வில்லை. நாட்டில் மிகவும் அபிவிருத்தி குன்றிய சமூகங்களி லொன்றாக வாகரைப்பகுதி மக்கள் இருந்தனர். இனப்பிரச்சினை 1980களில் மிகவும் தீவிரமடைந்த காலப் பகுதியில் வாகரை ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதி கொண்ட தமிழர் தாயகத்தை உருவாக்கும் அரசியல் திட்டம் கொண்டோருக்கு முக்கியத் துவம் வாய்ந்ததொரு இடமாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குக்கான இராணுவ அரசியல் ரீதியிலான நிகழ்ச்சித்திட்டத்தைப் பொறுத்த வரையிலும் வாகரை சௌகரியமானதொரு மறைவிட மாகவும் ஆட்திரட்டலுக்கான தொரு பொருத்தமான இடமாகவும் இருந்து வந்துள்ளது. தவிரவும் இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக் குமான மோதல்களுக்குரிய கள மாகவும் இது மேலும். இருந்து வந்துள்ளது. 1990களின் நடுப் பகுதி வரை அரசினால் கைவிடப் பட்ட ஒரு ஒதுங்கிய பிரதேசமாக இருந்ததன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டது.

ஓகஸ்ட் 2006 காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மூதூர்ப் பகுதியிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முதலாவது பாரிய தாக்குதலை முன்னெடுத்த போது, மூதூரின் தென் பகுதியிலிருந்து கூடிய எண்ணிக்கையில் தமிழர்கள் வெருகல் ஆறு வழிய+டாக வாகரைக்குள் தப்பியோடி வந்த னர். இந்தப் பாரிய இடப் பெயர் வினை அடுத்து வாகரையின் சனத்தொகை ஆகக் குறைந்தது நாற்பதாயிரம் பேரால் அதிகரிக் கப்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த மக்கள் கதிர வெளி, பால்சேனை வம்மி வெட்டுவான், கண்டலடி மற்றும் வாகரை நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஏற் கெனவே வாகரையில் நிலவிய வசதிகளுக்கான தட்டுப்பாடுகள் மனித சகிப்புத் தன்மையின் எல்லையையும் கடந்த ஒன்றாக மாறியது. அவ்வாறு இடம் பெயர்ந்தோர் சில பாடசாலை களிலும் ஏனையோர் கிடுகுகளால் தற்காலிக ஒதுக்கிடங்களை தமக்கென அமைத்துக் கொண்டும் தங்கினர். இவையும் கிடைக் காதோர் பெருவெளிகளில் இருந்து கொண்டு மர நிழல்களின் கீழே ஒதுங்கிக் கொண்டனர். வாகரை யில் இயங்கிய சில மனிதாபிமான தொண்டுமுகவர் நிறுவனங்கள் வாகரையில் நிலவும் அவலங்கள் குறித்து, தொடர்ச்சியாக பொது மக்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும் அம்மக்களுக்கு வழங் கப்படக் கூடியதான நிவார ணங்கள் மற்றும் அவசர உதவிகள் போன்றன யாவும் துரதிர்ஷ்ட வசமாக இராணுவ ரீதியிலான நிபந்தனைகள் காரணமாக தடைப் பட்டுப் போய் விடுவனவாயி ருந்தன.

ஒக்ரோபர் 2006 காலப்பகுதியில் வாகரையை விட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை வெளியேற் றுவதற்கான இரண்டாவது கட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்ப மானது. ஒக்ரோபர் 27 கஜுவத்த மற்றும் மாங்கேணி இராணுவ முகாம்களைக் கடந்து வாகரைக்குள் பிரவேசிப்பதற்கு இருக்கக் கூடிய தான ஒரேயொரு பாதைய+டாக வாகரைக்குள் செல்ல தொண்டு முகவர் நிறுவனங்களுக்கான அனுமதி இராணுவத்தால் மறுக்கப்பட்டது. இந்த வகையில் வீதி மூடப்பட்டதால் போக்கு வரத்துக்கள் குழம்பிப் போனதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் உள்ளடக்கிய வாகரை மக்களுக் கான அத்தியாவசிய விநியோகங் களை செய்யமுடியாது போனது. வாழைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு வியாபாரக் கொடுப்பனவுகளுக்காக வாகரையி லிருந்து சென்ற மக்கள் உட்பட பொருட்கள் வாங்குவதற்காக சென்றவர்களால் திரும்ப முடிய வில்லை. அவர்கள் சுனாமி காரணமாக இடம் பெயர்ந்தோருக் காக வாழைச் சேனை விநாயகபுரம் பாடசாலையி லும் பெந்தகொஸ்த மிஷனிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஒதுக்கிடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். வாரங்கள் கழிந்தும் அவர்கள் தமது குடும்பங் களுடன் இணைந்து கொள்வதற் கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையிலேயே காணப்பட்டனர்.

வாகரையில் தங்க வைக்கப் பட்டிருக்கும் இடம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடி களையும் அவர்களது அவல நிலைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு தொண்டு முகவர் நிறுவனங்களும் ஏனைய மனிதா பிமான அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்கள் எவையும் ஏற்கப்படாத நிலையில் வீதிகள் திறக்கப்படவில்லை. நவம்பர் 8ஆம் திகதி இராணு முகாம் களிலிருந்து அப்பகுதி எறிக ணைத் தாக்குதல்களுக்கும், ஆகாய மார்க்கமான குண்டுத் தாக்குதல்களுக்கும் இலக்கானது. ஷெல்வீச்சுகள் கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியால யத்தில் வீழ்ந்தன. அங்கு தான் மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். இதற்கு மேலாக அயலில் சுனாமியால் இடம்பெயர்ந்தோரும் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தனர். இங்கு வீழ்ந்து வெடித்த எறிகணையால் 42 பேர் கொல்லப் பட்டனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப ;பட்டோரில் ஆறு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய சிசுக்கள் ஆறு. இந்த வகையில் காயமடைந் தோருக்குத் துரிதமான மருத்துவ வசதிகள் பெற முடியாத நிலை காரணமாக, சில மரணங்களும் சம்பவித்தன. ஒரேயொரு மருத்து வர் மாத்திரம் சேவை செய்யும் வாகரை ஆஸ்பத்திரியில் திடீரெனக் கொண்டு செல்லப்படும் காயமடைந்தோரதும் மரணம டைந்தோரதும் தேவைகளை நிறைவேற்ற முடியாத வசதியீ னங்களும் பல்வேறு தட்டுப் பாடுகளும் காணப்படுகின்றன. ஷெல் தாக்குதல்களையடுத்து நான்கு மணித்தியாலங்களுக்குப் பின்னரும் கூட வாழைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களி லிருந்து அவசர அவசரமாக வந்த அம்புலன்ஸ் வாகனங்கள் மாங் கேணி சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. காய மடைந்த 40க்கும் அதிகமானோர் வாழைச்சேனை மற்றும் மட்டக் களப்பு வைத்திய சாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு பெண்ணும் குழந்தையும் வழியில் மரண மாகினர்.

வாகரையிலிருந்து வாழைச் சேனைக்கும், மட்டக்களப்பிற்கும் அன்றைய தினம் கொண்டு செல்லப்பட்ட மக்களது பரிதாப நிலை அங்கு எத்தகைய தொரு அவலநிலையும், துன்ப துயரங் களும் குடிகொண்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாய் அமைந் துள்ளது. நீண்ட காலம் கடுமையாக நிலவிய உணவுத் தட்டுப் பாட்டினால் பெரிதும் பாதிப்புக் குள்ளாகி நலிவடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தோர் சகலரும் சத்திர சிகிச்சைக்கு முன்னதாக, உடனடி யாக குருதிய+டாகப் போசணை செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். ஷெல் வீச்சுக்களினால் பதற்றமடைந்த மக்கள் கதிரவெளிப் பகுதியில் சிதறியோடியதன் காரணமாகப் பல குடும்பங்கள் பிரிந்திருந்தன. காயமுற்றோர் குழந்தைகள் உட்பட முதலில் வாழைச்சேனை ஆஸ் பத்திரிக்குக் கொண்டு செல்லப் பட்டு அதன் பின்னர் மட்டக் களப்பிற்கு மாற்றம் செய்யப் பட்டனர். இவர்களில் அநேகம் பேருடன் குடும்ப அங்கத்தவர் எவரும் இருக்கவில்லை. வாழைச் சேனையில் காயமடையாது ஒருவாறு தப்பியிருந்தோர் மத்தி யிலும், தமது உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஏக்கமும் கவலையும் நிலவியது. காயமடைந்தோர் தமது குடும்ப அங்கத்தவர்கள் எவருக்கும் அறிவிக்கப்படாத நிலையிலேயே வாழைச்சேனை யிலிருந்து மட்டக்களப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மட்டக்களப்பிற்குச் சென்று தமது குடும்ப அங்கத்தவர்கள் அங்கி ருக்கிறார்களா என்று பார்த்து வருவதற்கான பஸ் கட்டணத்தைச் செலுத்தக் கூடிய நிலைகூட இல்லாதவர்களாகவே இடம் பெயர்ந்தோரில் பெரும்பா லானவர்கள் இருக்கின்றார்கள். நவம்பர் 9ஆம் திகதி நான் அம்பாறையில் இருந்து மட்டக் களப்பிற்கு வந்தேன். மட்டக்களப் பிலிருந்து வந்த சகாக்களுடன் சேர்ந்து மரணமாகிய பெண் ஒருவரின் சடலத்தை அவரது முழுக் குடும்பத்தினரும் வாழும் கதிரவெளிக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமுகமாக நான் வாழைச்சேனைக்கும் மட்டக்களப் பிற்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேர்ந்தது.

கதிரவெளி குண்டு வீச்சையடுத்து ஒரு சில தினங்களுக்குள் அலன் றொக், சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் நவம்பர் 10 ஆம் திகதி வாகரைக்கு விஜயம் செய்தது ஏதேச்சை யாகவே நடந்த ஒன்றாகும். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விசேட அனுமதியின் பேரில் ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சகிதம் அவர் வாகரை வந்தார். அங்கு கதிரவெளியில் விடப்பட்டு வந்த குடும்பங்களை அவர் சந்தித்தார். அதன் பின்னர் அவர் புறப்பட முற்பட்டபோது அவரது காருக்கு முன் மக்கள் வீதியில் அமர்ந்து, செல்ல விடாது தடுத்தனர். அவர்கள் அவரைத் தடுத்ததற்குக் காரணம் அவர் புறப்பட்ட அடுத்த கணமே ஷெல் வீச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகி விடும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாலேயே எனத் தெரிவித்தனர்.

மனிதாபிமான சட்டங்கள் மற்றும் நியமங்கள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து உள்நாட்டி லும் சர்வதேச ரீதியாகவும் கண்ட னக் குரல்கள் எழுந்த போதும் அரசாங்கம் வாகரை மீது தரை, ஆகாய மற்றும் கடல் ஆகிய மும்முனைகளிலுமிருந்து தாக்கு தல்களைத் தொடர்ந்த வண்ண மிருந்தது. மேலும் மனிதாபிமான தொண்டு முகவர் நிறுவனங் களுக்கான அனுமதி மறுப்புகள் தொடர்ந்த நிலையில், பல கண்டனங்கள், வற்புறுத்தல்களை யடுத்து நவம்பர் 29ஆம் திகதி உணவு விநியோகங்களைக் கொண்ட வாகன அணி அப் பகுதிக்கு உட்செல்ல அனுமதிக் கப்பட்டது. உணவு விநியோகங் களுக்கான வற்றை உள்ளடக்கிய நிலையில், உட்செல்வதற்கான அனுமதிக்காக 'ட்ரக்குகள்' அணிவரிசையாக நிறுத்தப் பட்டிருந்த போது மாங்கேணி சோதனைச் சாவடிக் கருகில் குழுமிய மக்கள் குழுவினர் ஓடிச் சென்று பொருட்களைச் சூறையாடினர். அதேவேளை அச்சூறையாடலைத் தடுத்து நிறுத்த எத்தகைய நடவடிக்கை களையும் எடுக்காது படையினர் பாராமுகமாக நின்றனர். இடம் பெயர்ந்தோருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சூறையாடிச் சென்றதாக வெளி யாகிய சில அறிக்கைகள் இந்த வகையில் முரண் படுவனவாய்க் காணப்படுகின்றன. இதன் பின்னர் மீண்டும் மனிதாபி மான தொண்டு முகவர் நிறுவனங்களுக்கு தடை கொண்டு வரப்பட்டது.

2006 டிசம்பர் காலப் பகுதி முற்றாகவும் வாகரை மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆட்புலப் பிரதேசத்தைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு படையினரும், தமிழீழ விடுத லைப் புலிகளும் சண்டையில் ஈடுபடுகையில் இடம் பெயர்ந் தோரும், குடிமக்களுமே அதற் கான விலையைச் செலுத்த வேண்டியவர்களாயிருந்தனர். டிசம்பர் 8 ஆம் திகதி ஷெல் தாக்குதல்களுக்கு வம்மிவெட்டு வான் இடம் பெயர்ந்தோர் குடியமர்த்தப்பட்ட பகுதி இலக்கா கியதை அடுத்து 9 சடலங்கள் வாகரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன. மேலும் பல சடலங்கள் தமது பகுதிகளி லேயே புதைக்கப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர். டிசம்பர் 10ஆம் திகதி நாட்டின் ஏனைய பகுதிகளும் உலகமும் மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டித்த போது கண்டலடி, இடம்பெயர்ந் தோர் பகுதி மீது ஷெல்கள் வந்து வீழ்ந்தன. இதையடுத்து 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இறந்தோர் தொகை எண்ணிக்கையினை உறுதிப்படுத்த முடியாமைக்குக் காரணம், சில சடலங்கள் ஆஸ்பத் திரிக்குக் கொண்டு செல்லப்படாம லேயே எங்கெங்கு காணப்பட்ட னவோ அங்கங்கேயே புதைக்கப் பட்டன. மீண்டும் அதே நிலைமை தான் வாகரை ஆஸ்பத்திரியில். காயமடைந்து கொண்டு செல்லப்பட் டோருக்கு சிகிச்சையளிக்க முடியாதவாறு அங்கு வசதிகள் மிகவும்தட்டு;பாடான நிலையில் இருந்தன என்பதுடன் வாழைச் சேனைக்கான வீதி மூடப்பட்ட மையும் காரணங் களாகும்.

இந்தப் பாரதூரமான நிலைமை தொடர்ந்ததால், மக்கள் என்ன நடக்குமோ என்று பீதியும், கலவரமுமடைந்ததுடன் என்ன விலை கொடுத்தேனும் வாகரையை விட்டு வெளியேறி விட வேண்டு மெனவும் தவித்தனர். ஷெல் தாக்குதல்கள் கடூரமாக இருந்தன. மிகவும் தீவிரமான நோக்கு டனேயே இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. வாகரை மக்கள் கால் நடையாகவே அப்பகுதியை விட்டு நகரத் தொடங்கினர். பல நாட்களாக அவர்கள் யானைகள் நிறைந்த காடுகளிடையே இடை விடாது நடந்து இறுதியில் மட்டக்களப்பிற்கான பிரதான வீதியை அடைந்தனர். மக்கள் வெளியேற்றத்தைத் தடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் சென்ற திசையை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் ஷெல் வீச்சுக் களை நடாத்தினர். பசித்தும், திகிலடைந்தும் போயிருந்த மக்கள், கூட்டம் கூட்டமாக வெலி கந்த பகுதிகளிலும் அவற்றைச் சூழ்ந்ததாக உள்ள காடுகளுக்கு ஊடாகவும் நடந்து பல்வேறு இடங்களிலும் வெளிப்பட்டனர். றெதிதென்னவை சனங்கள் வந்து சேர்விடமாகக் குறிப்பிட்டிருந்த படையினர், பின்னர் அவர்களை வாழைச் சேனைப் பகுதியில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கினர். இடம்பெயர்ந்த ஏனையோர் வெருகல் ஆற்றைக் கடந்து திரு கோணமலை மாவட்டத் திலிருக்கும் தமது ப+ர்விக இடங்களுள்ள பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் அங்கும் அவர்களுடைய வீடுகள் தொடர்ந்தும் யுத்த நடவடிக்கை ளுக்குரிய பகுதிகளில் அமைந்தி ருந்ததனால் அவர்கள் அங்கிருந் தும் நலன்புரி நிலையங் களுக்கே செல்ல வேண்டிய நிலையேற்ப ட்டது.

வாகரையைச் சேர்ந்த ஏனையோர் படகுகளின் மூலம் வாழைச் சேனையைச் சென்றடைய முயற்சித்தனர். இந்தப் பாதை சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் மிகவும் கடுமையாக நோய் வாய்ப் பட்டிருந்த மக்களை வாழைச் சேனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முன்பு பயன் படுத்தப்பட்டது. நெருக்கடிகள் சூழ்;ந்த காலங்களில் மக்கள் சிலவேளைகளில் ஆளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபா போன்ற பெருந் தொகைப் பணத்தை குறுந்தூர ஆனால் ஆபத்து நிறைந்த பயணம் ஒன்றை வாழைச் சேனையிலுள்ள பேய்த்தாழை இறங்குதுறைவரை மேற்கொள் ளும் பொருட்டு கொடு;க்கின்றனர். பருவப் பெயர்ச்சிக் கால நிலை என்பதால், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. சிறிய ஆனால் நிறையப் பேர்கள் ஏற்றப்பட்டு பாரங் கூடியிருந்த வள்ளங்களில் ஒன்று பரந்த கடற்பரப்பிலிருந்து வாவிக்குச் சென்று வரும்போது கவிழ்ந்ததை யடுத்து குறைந்தது 15 பேர் மாண்டனர். இவர்களுள் 7 பேர் 9 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர் களுள் பலர் ஒரே குடும்பத்தைச் சேர்;தவர்கள். ஒரு தாய் 24, 17, 10 வயதுடைய தனது பிள்ளை களுடன் 6 மாத கால குழந்தை யையும் பறிகொடுத்து எல்லாமாக நான்கு பிள்;ளைகளை இழந்துள் ளார்.

டிசம்பர் 18 வரையில் எல்லாமாக 14 ஆயிரம் பேர்வரை வாகரையி லிருந்து இடம் பெயர்;தோர் வாழைச்சேனையில் இருந்தனர். இராணுவ நடவடிக்கைகளுக்கு தம்மைத் தயார் செய்தோர், தாக்குதலையடுத்து பெருந் தொகையான குடிமக்கள் இடம்பெயர நேரிடும் என்பதை கணக்கிலெடுத்ததாகத் தெரிய வில்லை. பாரிய அளவில் குடிமக்கள் இடப்பெயர்கை ஒன்று நேரும்போது, அத்தகைய நிலைமையினை எதிர் கொள்ளத் தக்க வகையில் அல்லது சமாளிக்கும் வகையில் எத்தகைய முன்னேற்பாடுகளும் செய்திருக்க ப்படவில்லை. தொண்டு முகவர் நிறுவனங்களுக்கு அவர்களுக் கான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வ தில் பல சிரமங்கள் ஏற்பட்டன. சிறிய அளவு தொகை யினராக வாகரையிலிருந்து ஏற்கெனவே இடம்பெயர்ந்து வந்திருந்தோரைத் தங்க வைப்பதற்குப் பயன்படுத்த ப்பட்ட சுனாமி காலத் தங்கு மிடங்கள், திடீரென வந்திருக்கும் பெருந் தொகையினரைத் தங்க வைக்க கொஞ்சமேனும் போதாது. எனவே தற்காலிக இடங்கள் அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டு, தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதேவேளை, இராணுவ நடவடிக் கைகள் மேலும் தொடர்ந்த தால், பால்சேனை கதிரவெளி ஆகிய இடங்களிலிருக்கும் இடம் பெயர்ந் தோருக்கான தங்குமி டங்கள் முற்றாகச் சேதப்படுத்தப் பட்டன. வாகரை மக்களைப் பொறுத்த வரையில் 2007 காலை, அவர்கள் வீட்டைவிட்டுத் தப்பியோடும் அவல நிலையு டனேயே விடிந்தது. ஜனவரி 18ஆம் திகதி வாகரை ஆஸ்பத்திரியில் ஷெல்கள் வீழ்ந்த வேளை, எஞ்சியிருந்தோரில் கொஞ்ச நஞ்சமாக இருந்தோரும் ஒன்று கூடி விட்டனர். குறைந்தது எல்லாமாக 4 ஆயிரம் மக்கள் அச்சமயத்தில் அங்கிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக எஞ்சியிருந்த கிட்டத்தட்ட 9 ஆயிரம் வரையிலான குடிமக்கள் கஜுவத்த படை முகாமுக்குச் சென்று விட்டனர். மருத்துவர் தனது இருப்பிடத்தை விட்டுச் சென்று விடத் தீர்மானித்தார். ஆஸ்பத்திரி மூடப்பட்டது. ஜனவரி 21ஆம் திகதி வரையளவில் வாகரையில் குடிமக்கள் எவரும் இருக்க வில்லை. ஜனவரி முடிவில் மட்டக்களப்பில் குறைந்தது 70 ஆயிரம் பேரளவில் இடம் பெயர்ந்தோர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் களுள் குறைந்தது 40 ஆயிரம் பேர் வாகரையிலிருந்து டிசம்பர் மற்றும் ஜனவரி காலப் பகுதியில் வந்தவர் கள். சனநெருக்கடியும் அடிப்படை வசதிகளும் குறைந்த நலன்புரி நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இடம்பெயர்;ந்தோர் எதிர்நோக்கிய முக்கியமான, பாரதூரமான பிரச் சினை அவர்களுடைய வசதியீ னங்கள் என்பதல்ல, அவர்களு டைய பாதுகாப்பின்மை தொடர்பி லானவையாகும். நலன்புரி நிலையங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்க வில்லை. மட்டக்களப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அங்கத்தவர்களை இடம்பெயர்ந் தோர் போல ஊடுருவச் செய்து விடலாம் என்ற அச்சம் காரணமாக இடம் பெயர்ந்தோர் மிகக் கடுமையான முறையில் சோத னைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் நலன்புரி முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்ன தாக அவர்கள் முதலில் படையின ராலும், மற்றும் கருணா பிரிவின ரைச் சேர்ந்தோராலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர். இந் நடைமுறை பேய்த் தாழைப் பகுதியில் மிகக் கடுரமான முறையில் நடைமுறைப் படுத்தப் படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. படகுகளில் வந்தோர் தமது உறவினர்களையும் தமது பிள்ளைகளையும் பறி கொடுத்து வந்த நிலையில், (படகு கவிழ்ந்ததால்) அழுது புலம்பிய வாறு இருந்த போது எத்தகைய தயவு தாட்சண்யமுமின்றி, இறங்கு துறைக்கு அப்பாலுள்ள தனியிடத் திற்குக் கொண்டு செல்லப்பட்டு கருணா குழுவினரால் அவர்கள் தீவிரமான முறையில் விhரணை களுக்கு உட்படுத்தப்படுவதை காணக் கூடியதாக இருந்தது. இதோடு நின்று விடாது அவர்களுடைய விசாரணைகளை யடுத்து, பேய்த்தாழையிலுள்ள படையினரது காரியாலயத்திற்கு மேலதிகமான விசாரணைகள் மற்றும் பதிவு நடைமுறை களுக்காக அவர்கள் கையளிக்கப் படுகின்றனர். தற்போது மட்டக் களப்பிலுள்ள நலன்புரி நிலையங் கள் சகல விதமான தாக்குதல் களுக்கும் சோதனை நடவடிக் கைகளுக்கும் உட்படுத்தப்படும் அபாய நிலையில் உள்ளன. சாதாரண உடைகளை அணிந்து ஆயுதங்கள் சகிதம் நலன்புரி நிலையங் களுக்குள் பிரவேசித் தோர் அங்குள்ளோரை விசாரணை களுக்கு உட்படுத்தி அவர்களை அடித்து, அச்சுறுத்தியதுடன் கையடக்கத் தொலை பேசிகள் உட்பட வேறு பொருட் களையும் களவாடியதுடன் இளைஞர்களைக் கடத்திச் சென்றார்களெனவும் முறைப்பாடுகள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் தாய்மார்கள் கடத்தல்களை தடுக்க முற்பட்ட வேளைகளில் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்களெனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கருணா பிரிவைச் சேர்ந்தோர் தானென்பது பாதிக்கப் பட்டவர்களுக்கு எத்தகைய சந்தேகங்களு மின்றி நன்கு தெரியவந்திருப்பதால். அவர்கள் அதிகாரிகளுக்கு முறையிடத் தயக்கம் காட்டி வருகின்றனர். தாம் பழிவாங்கப்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். இதற்குப் பதிலாக மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) காரியாலயங்களுக்கும் மற்றும் அவர்களது முகாம்களுக் கும் சென்று தமது பிள்ளைகளைத் தேடி வருவதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு மன்றாடியும் வருகின்றனர்.

திருகோணமலையைத் தமது ப+ர்வீக மாவட்டமாகக் கொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக அவர்களது எதிர்காலம் குறித்த கேள்வியானது இரண்டாவது முக்கிய பிரச்சினையாகும். திரு கோணமலை மாவட்ட மீள்வரவு குறித்த பிரச்சினை யானது, அதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையடுத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பதற்ற நிலைமைகளைத் தோற்று வித்து வந்துள்ளது. கடந்த ஒருவருட காலத்திற்கு மேலாக திருகோணமலையில் இனங் களிடையே கொந்தளிப்பானதொரு நிலைமை உருவாகி வந்துள்ளது. மட்டக்களப்பிற்கு உயிர் பிழைக் கும் பொருட்டுத் தப்பியோடிய இடம் பெயர்ந்த மக்களது திரும்புதலும், மீளக் குடியமர்த்தப் படுதலும் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சி னையாக இருக்கும். இந்த வகையில் மட்டக்களப்பில் தற்போது இருக்கும் சகல இடம்பெயர்ந் தோரும் பாரபட்சமின்றி, நீதியான முறையில் தனியே நலன்புரி நிலையங்களிலுள்ளோரை மாத்திர மின்றி, வேறு குடும்பங் களுடன் நண்பர்களுடன் மற்றும் வாடகை இடங்களில் இருப்போரையும் கவனத்துடன் கணக்கிலெடுத் துப்பதியப்படுவதாக இருக்க வேண்டியது மிகவும் அவசிய மாகும். இந்த அடிப்படையில் பதற்ற நிலைமைகள் எவ்வாறு தோன்றக் கூடியதாக இருக்கும் என்பது குறித்து, அதன் சாத்தியங்களை சிந்தித்துள்ள தொண்டு முகவர் நிறுவனங்கள், திருகோணமலைப் பகுதியில் தற்காலிக இடங்களை முன் கூட்டியே அடையாளப் படுத்தி வைத்துள்ளன. அத்தகையதொரு இடமான கிளிவெட்டியில் ஏற்கெனவே தற்காலிக தங்கு மிடங்கள் அல்லது இடைத்தங்கல் ஒதுக்கிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில்; இ;ந்த மக்கள் தங்களுடைய கிராமங் களுக்குத் திரும்பக் கூடிய விதத்தில் பாதுகாப்பு நிலைமை சீரடையப் போவதில்லை. சம்ப+ரில் உத்தேசிக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்திற்குரிய பகுதியைச் சூழ ஒரு உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்;து முகமாக விசேட பொருளாதார வலயங்களை உருவாக்கும் திட்டத்தினாலும் மற்றும் திருகோணமலையில் நவீன நகரமயவாக்கத்தை ஏற்படுத் துவதற்கான துரித திட்டங்கள் போன்றவற்றாலும் குறிப்பாக இந்த மாவட்டத்தில் காணி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் உருவாகும். இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியுமோ இல்லையோ, இதனால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

தமிழில் : ஜி.ரி.கே

No comments: