தமிழகம் இராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த தமிழ் அகதிகளுடன் அரபு மொழிபேசும் ஈரானியர்கள் இருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த 12 தமிழ் அகதிகளுடன் இருந்த இவர்களை தமிழக காவற்துறையினர் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வடக்கில் இருந்து சென்ற அகதிகளின் வள்ளத்தில் ஏன் பயணம் செய்தார்கள்? ஈரானிய பிரஜைகள் வடக்கிற்கு சென்றதன் நோக்கம் என்ன? இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளுக்கு விசேட பயிற்சியை அளிக்கச் சென்றார்களா? என்ற கேள்விகளை தமிழக காவற்துறையினர் தொடுத்துள்ளனர்.
2nd lead
இதையடுத்து அவர்களை தனியாக பிரித்த கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், நாங்கள் இலங்கையில் சமூக சேவையாற்றி வருகிறோம். எங்களுக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது. ஆனால் கொழும்பு சென்று வர முடியாத அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. இதனால்தான் அகதிகளுடன் சேர்ந்து வந்தோம் என்றனர்.
இருப்பினும் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Friday, 4 April 2008
(2nd lead)தமழிகம் இராமேஸ்வரத்தில் இலங்கை அகதிகளுடன் அரபு மொழிபேசும் ஈரானியர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment