Thursday, 3 April 2008

இந்தியா-பர்மா இடையில் போக்குவரத்து ஒப்பந்தம் நெருங்குகிறது

இராணுவத் தளபதி மாங் ஆய் பர்மிய அரசின் பலம் வாய்ந்த இரண்டாவது முக்கியத் தலைவரான ஜெனரல் மாங் ஆய் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியத் தலைநகர் புதுடில்லி வந்துள்ளார்.

இந்த விஜயத்தின் முடிவில் இருநாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் போக்குவரத்துக்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நூறு மில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்ததத்தின் மூலம் பர்மாவின் துறைமுகமானன சிட்வேயுடன் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை சாலை மற்றும் நதிகள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பர்மாவின் மோசமான மனித உரிமை மீறல்கள் நிலவரங்கள் தொடர்பில் அந்த நாடு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் நிலவுகின்ற போதிலும், இந்தியா பர்மாவுடனான இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்மாவின் எதிர்கட்சியுடன் ஆளும் இராணுவ அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என இந்தியா வலியுறித்தி வந்தாலும், அந்த நாட்டுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது.

1 comment:

Anonymous said...

i like this approach.