Thursday, 3 April 2008

வரலாற்றில் முதற்தடவையாக மன்னார் மடுமாதாவும் இன்று அகதியாக இடம் பெயர்க்கப்பட்டார்.

மன்னார் மடுமாதா தேவாலய பகுதியில் பாரியளவில் எறிகனை வீச்சுகள் நடத்தப்படுவதை அடுத்து மடுமாதாவின் உருவச்சிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஆத்துடன்மடுமாதா தேவாலயத்திற்கு அருகில் போர் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றமையால் மடு தேவாலயத்தின் ஆவணங்களும், பொருட்களும் இன்று காலை முதல் பணியாளர்களினால் அப்புறப்படுத்தப்படுவதாக மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.உக்கிரமடைந்து வரும் யுத்த முன்னெடுப்புகளால் மடுப்பகுதியில் இருக்கும் மதகுருமார்கள், அருட் துறைவிகள், பணியார்களும் அங்கிருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது தொடர்பில் விரைவான முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் மன்னர் மடு தேவாலயப் பகுதியில் வசித்துவந்த 36ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. படையினரின் எறிகணைகள் கடந்த சில நாட்களாக தமது குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதால் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தேவையான உதவிகளைச் செய்து வருவதுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றது.

No comments: