Friday, 18 April 2008

ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி?

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் நுவரெலிய கந்தபொல தேயிலைத் தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் அணியும் இரண்டு அங்கிகளில் ஒன்று அனுருத்த ரத்வத்தேவை படுகொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததெனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுருத்த ரத்வத்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக காணப்படுவதால் அந்த நேரத்தில் அவர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாகவும், 2005ம் ஆண்டு முதல் வன்னியிலிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விசாரணகளில் தெரியவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

1 comment:

ttpian said...

narrow escape-don't worry,u will be placed in Hell soon!