Friday, 18 April 2008

விமல் வீரவன்ச வீட்டைவிட்டு வெளியேற்றம்.

ஜேவீ.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தாம் வசித்த வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடமொன்றுக்குச் சென்றுள்ளார்.

விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ஜே.வீபீ.யினால் வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்புகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும், வாகனச் சாரதியாக பணியாற்றிய கட்சி உறுப்பினர் விலகிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்; விமல் வீரவன்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். விமல் தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அசல ஜாகொட மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

vimal is a good drama artist;he know how to cheat singala racist community!