அமைச்சர் ஜெயராஜின் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற பல காலம் செல்லும் என காவல்துறை ஊடக பேச்சாளர் என்.கே இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில்; காணப்பட்ட குறைப்பாடுகள் காரணமாக அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொல்லப்பட்டரா என்பதை ஆராய பாதுகாப்பு அமைச்சு விசாரணை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குறைப்பாடுகள் இருந்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து சரியாக எதனையும் கூறமுடியாதுள்ளது.
விசாரணை சபையின் அறிக்கை கிடைத்த பின்னரே சரியான தகவல்களை வழங்க முடியும் எனவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். இந்த நிலையில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும், தொலைத்தொடர்பு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணொருவரும் அமைச்சர் ஜெயராஜ் தொடர்பான தகவல்களை கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சரின் கொலை தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்துள்ளதாக கூறப்படும் இவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே பயணம் செய்யும் இடங்கள் தொடர்பிலான தகவல்களை விடுதலைப்புலிகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
Friday, 18 April 2008
ஜெயராஜின் கொலை விசாரணைக்கு - நீண்ட காலம்: - காவற்துறை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sethuponavanukku joshyam parthu enna proyajanam?
Post a Comment