இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இயங்கும் மிஹின் எயார் வானூர்தி நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதனையடுத்து அதன் தலைவராக செயலாற்றி வந்த சஜின் வாஸ் குணவர்த்தன தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கு பதிலாக மிஹின் எயார் நிறுவனத்தின் சார்பில் பீஜிங்கில் பணியாற்றும் ஜெயசீலன் என்பவர் நிறுவனத்தின் இலங்கைத்தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை வங்கியில் ஏற்கனவே மிஹின் எயாருக்கு 796.8 மில்லியன் ரூபாய்கள் கடனாக உள்ளன.
இந்த மாதத்தில் மாத்திரம் அந்த நிறுவனத்திற்கு 175 மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டு;ள்ளன. இதனைதவிர தற்காலிக மேலதிக பற்றாக இலங்கை வங்கி மிஹின் எயாருக்கு சுமார் 400 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் பில்லியன் ரூபாய்களை நட்டமாக கொண்டுள்ள மிஹின் எயாருக்கு எவ்வித பிணைமுறிகளும் இல்லாமல் கடன் வழங்கியமை மத்திய வங்கியின் ஆளுநர் நவாட் கப்ராலின் முகாமைத்துவம் இன்மையையே காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Sunday, 20 April 2008
மிஹின் எயார் வங்குரோத்தில்:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment