கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இருவர் நேற்று முன்தினம் (10-04) வெள்ளை வானத்தில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். குடும்பஸ்தர்களான இவர்கள் இருவரும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற வெள்ளைவான் குழு இவர்களை கடத்திச்சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தைநச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய எமனுல் அந்தோனிதாஸ், யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, 47 வயதுடைய றப்கால் பெர்ணாட் ஆகிய இருவருமே கடத்தப்பட்டவர்கள் என உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.. மீன்பிடித் தொழிலாளியான பெர்ணாட் தனது மகனை வெளிநாடு அனுப்புவதற்காக கொழும்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
புத்தளத்தில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (10-04) வனாத்த முல்லை கரடிப்பூவல் கிராமத்தில், இரவு 9 மணியளவில், இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட இவர்கள், 27 வயதுடைய சுப்ரிமணியம் சத்திய குமார், 27 வயதுடைய கோவிந்தன் நாகராஜ் என, உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை வானில் சென்ற சிலர் வீட்டில் புகுந்து பலாத்காரமாக இவர்களை கடத்திச் சென்றதாக உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
Sunday, 13 April 2008
கொட்டாஞ்சேனையில்,புத்தளத்தில் தலா இருவர் கடத்தல்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment