நீர்வேலி மற்றும் கைதடிப் பகுதியில் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.நீர்வேலி, சிறுப்பிட்டி தெற்கைச் சேர்ந்த குணசிங்கம் சுரேஷ்குமார் (வயது27) என்ற தச்சுத் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டார். அச்சுவேலி பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் யாழ். ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதடி மேற்கைச் சேர்ந்த பண்டாரி பரமநாதன் (வயது34) என்பவரே கைதடியில் சுடப்பட்டவராவார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை. கைதடி தெற்கில் உள்ள தமது சலவைத் தொழிலகத்தில் இருந்தவேளை, அங்கு வந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்திய பின் சடலத்தை யாழ். ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
Sunday, 13 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment