2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இருவர் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.
ரத்னசபாபதி நவரத்னராஜா, மற்றும் அருணாசலம் பரசிவராம் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விருவரும் கூட்டமைப்பில் தற்போதும் அங்கம் வகிக்கின்றனரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Monday, 21 April 2008
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இருவர் கிழக்குத் தேர்தலில்?-சிங்கள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment