Monday, 21 April 2008

மடு திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா?-- அமெரிக்க செய்மதி கண்காணிப்பு


மடு தேவாலய பிரதேசத்தை நோக்கி இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா என்பதை அமெரிக்கா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

எனினும் படைத்தரப்பினர் மடுதிருப்பதியை நோக்கி தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மடுத்திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதலை நடத்துவதாக கூறி சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா செய்மதிக்கண்காணிப்பை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

No comments: