Sunday, 20 April 2008

கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜே.வி.பி. பிளவு குறித்து ஜனாதிபதி மஹிந்த ரணில் ரகசிய பேச்சு

மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கடந்த வாரம் இரகசிய சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் தமிழ் சிங்கள புத்தாண்டு வாரத்தில் இச்சந்திந்நு நடைபெற்றது. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகனின் திருமண வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பி) ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும் அதனால் அரசியல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்பு மற்றும் ஜே.வி.பியின் பிளவு அரசாங்கத்திற்கா? ஐக்கிய தேசியக்கட்சிக்கா? சாதகமாக அமைந்துள்ளது என்பது தொடர்பாக இருவருக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையிலான குறுகிய நேர சந்திப்பின் போது மூத்த அமைச்சர்கள் சிலரும் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அருகில் இருந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்திற்கு சார்பாக அமைந்துள்ளதாக ஆளுங்கட்சியை சார்ந்தவர்களும் இல்லை, இல்லை ஐக்கிய தேசியக்கட்சிக்கே சார்பாக அமைந்துள்ளது என்று ஆளுந்தரப்பை சேர்ந்தவர்களும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

.

அந்த திருமண வைபவத்திற்கு விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க, அமைச்சர்களான கரு ஜயசூரிய, தினேஷ் குணவர்தன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இன்னும் சில அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஓரே மேசையில் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பின் போது ஜே.வி.பியுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்தே ஜே.வி.பிக்குள் ஐக்கிய தேசியக்கட்சியே பிளவை ஏற்படுத்தியதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: