கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களின் குழுவொன்று மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
அமைச்சர்களான காமினி லொக்குகே, மிலிந்த மொரகொட, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனோ விஜேரத்ன ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதன் விபரங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்படும்.
அமைச்சர்கள் நால்வருடனான பேச்சுவார்த்தை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டே நடத்தப்பட்டன. கட்சியின் சார்பில் நானும் எம்.பி.க்களான ரஞ்சித் மத்தும பண்டார, ரவி சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டோம்.
கட்சியில் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு விரும்பினால் கதவுகள் திறத்தே உள்ளன. திறந்த மனதோடு பேச்சுக்களை நடத்தி நிபந்தனைகள் எதுவுமின்றி இணைந்துகொள்ள முடியும் எனவும் அறிவித்தோம்.
இதன்போது அவர்களது தரப்பிலிருந்து சில விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதனை தற்போது வெளியிட முடியாது. அவர்களது கருத்துக்களை தலைவரிடம் சமர்ப்பித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கையை தலைவர் மேற்கொள்வார். நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
எது எப்படியாயினும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் கட்சித் தலைவர் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்.
Sunday, 20 April 2008
மகிந்த அரசில் உள்ள சில ஐ.தே.க உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.க க்கு செல்ல முயற்சி--காமினி லொக்குகே எம்.பி. தகவல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment