Monday, 21 April 2008

தமிழக அரசு தயாரிக்கும் படத்தில் விஜய்,சூர்யா

சென்னை : குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, தமிழக அரசு தயாரிக்கும் விழிப்புணர்வு படத்தில் விஜய், சூர்யா, மாதவன் நடிக்கின்றனர். மக்களுக்கு அவசியமாக சொல்ல வேண்டிய விஷயங்களை, மத்திய, மாநில அரசுகள் குறும்படமாக அல்லது விளம்பர படமாக தயாரித்து, அவற்றை தியேட்டர்கள் மூலமாகவோ அல்லது "டிவி' சேனல்கள் மூலமாகவோ மக்களை சென்றடையச் செய்வது வழக்கம்.

இவ்வகையில், குழந்தைகள் மற்றும் பெண் கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக அரசின் மூலம் விளம்பர படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய், சூர்யா, மாதவன் நடிக்கின்றனர். இப்படத்தை "கண்ணாமூச்சி ஏனடா' படத்தை இயக்கிய ப்ரியா இயக்குகிறார். "சிவாஜி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். நான்கு விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. குன்றத்தூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நடிகர் மூவரும் பணம் வாங்காமல் நடித்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

No comments: