பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் செலவிடப்பட்ட செலவீனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்காய்வுக் குழுவொன்றை அரசாங்கம் பிரித்தானியாவிற்கு அனுப்பியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கணக்காய்வுக் குழுவினர் தற்சமயம் இலங்கை தூதுவராலயத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக செலவிடப்பட்ட செலவீனங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் படி தூதுவராலய கட்டட நிர்மாண மற்றும் பராமரிப்பு பணிகள் கேள்விப் பத்திரங்கள் கோரப்படாதநிலையில் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கேள்விப் பத்திரங்கள் கோரப்பட வேண்டிய நடைமுறை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Monday, 21 April 2008
பிரித்தனியாவுக்கான இலங்கைத் தூதரக கணக்குகள் மீளாய்வு:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment