Thursday, 17 April 2008

மடுமாதவின் திருவுருவச் சிலையை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவர தீவிர முயற்சி

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள கொண்டு செல்லப்பட்டுள்ள மடுமாதவின் திருவுருவச்சிலையை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வருவதாற்கு அரசாங்கம் முயற்ச்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரச படைகள் மேற்கொண்டுள்ள கடுமையான தாக்குதல்கள் காரணமாக மடுமாதாவை மன்னார் தேவாலயத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டப்பாட்டு பகுதிக்குள்ள கொண்டு செல்வதற்கு ஆலய நிர்வாகம் தீர்மானித்ததாக கத்தோலிக்க திருச்சபை இன்று அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளும் கத்தோலிக்க மத அமைப்புகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இதனை அடுத்து மடுமாதாவிற்கு பூரண பாதுகாப்பு வழங்குவதாகவும் அதனை எவ்வாறெனினும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் கொண்டுவருமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கத்தோலிக்க திருச்சபைகள் ஊடாக மடுமாதா ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் இந்த கோரிக்கையினை மன்னார் மறை மாவட்ட திருச்சபையும் ஆலய நிர்வாகமும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: