நீங்க குரங்கா இலவசம் எண்டாலே ஈஈ எண்டு வாறது(sorry..sorry ..it for jork only)
செவ்வாய் கிரக பயணத்திற்கு தயார் செய்வதற்காக ரஷ்யாவின் கருங்கடல் அருகே உள்ள வெஸ்யோலோயே என்ற இடத்தில் உள்ள சோச்சி மருத்துவ கழகத்தில் 40 குரங்குகள் வளர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு முன்னோட்டமாக இந்த குரங்குகளை அங்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கழகத்தின் இயக்குநர் போரிஸ் லேபின் கூறுகையில், மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே நாய்கள் அல்லது பிற விலங்குகளை வைத்து பரிசோதனை நடத்துவதை விட குரங்குகளை அனுப்புவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு கதிர்வீச்சை சந்திக்க நேரிடும். அதை மனிதர்களால் சமாளிக்க முடியுமா என்பதை அறியவே குரங்குகளை அனுப்பி சோதனை செய்யவுள்ளோம்.
இந்த குரங்குகளுக்கு கதிர்வீச்சு சோதனை, சிறப்பு உணவு, தனிமை, எடைக்குறைவு உள்ளிட்ட பல சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் போரிஸ்.
1983ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு குரங்குகளை அனுப்பியது ரஷ்யா. அதன் பின்னர் 1996ம் ஆண்டுடன் விலங்குகளை அனுப்பும் சோதனையை நிறுத்தியது ரஷ்யா. காரணம், நிதிப் பிரச்சினை.
இந்த நிலையில் செவ்வாய்க்கு குரங்குகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது ரஷ்யா. இருப்பினும் குரங்குகள் செவ்வாய்க்கு செல்ல குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது.
லேட் ஆனாலும் லேட்டஸ்டாக செவ்வாய்க்குப் போகப் போவது முதலில் குரங்குகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
1 comment:
pl.take Mahindha family@ free of cost!
Post a Comment