வாஷிங்டன்: வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனி மலை மூன்று துண்டுகளாக உடைந்துவிட்டதாக கனடா நாட்டு நிபுணர்கள் பகீர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வாகன புகை, கார்பன் டை ஆக்ஸைட் அளவு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுவதல் என பல்வேறு காரணங்களால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி மலைகள் உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு, பெரிய அளவில் பருவ கால மாற்றங்களும் இயற்கை சீற்றங்களும் அழிவுகளும் ஆரம்பித்துவிட்டதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இதை பெரும்பாலான நாடுகள் காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளன. இருந்தாலும் அவ்வப்போது ஐ.நாவும் சில அக்கறையான நாடுகளும் கூட்டம் போட்டு எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளன.
உலகின் சுற்றுச்சூழலை கெடுத்த முக்கிய நாடான அமெரிக்கா தான் திருந்துவதை விட்டுவிட்டு மற்ற நாடுகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் அமெரிக்காவின் டிரன்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் டெரக் முல்லர் குழுவினர் மற்றும் கனடா நாட்டு நிபுணர்கள் வட துருவத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்களை வெளியுலகுக்கு அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி பீதியை கிளப்புகிறது.
வட துருவத்தை ஒட்டியுள்ள, கனடாவின் வட தூர பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது, 18 கி.மீ நீளமுடைய மிகப் பெரிய பனித் துண்டு, வார்ட் ஹன்ட் பனி அடுக்கிலிருந்து (இதுதான் இருப்பதிலேயே பெரிய பனி மலை) பிரிந்து, ஆர்க்டிக் கடல் நோக்கி பயணித்ததை தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பனி மலைகு 2002ம் ஆண்டு முதல் முறையாக உடைந்தது. இப்போது மேலும் மூன்று துண்டுளாக அது உடைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த பனி மலையே முற்றிலும் சிதைந்து போய் விடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆர்க்டிக்கில் உள்ள மிகப் பெரிய மலை அடுக்கு உடைந்திருப்பது கடந்த பிப்ரவரி மாதம் பெறப்பட்ட ரேடார்சாட் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கனடா நாட்டு துருவ ஆய்வாளர்கள் இதை உறுதி செய்தனர்.
இதுதவிர இன்னொரு பெரிய பனி அடுக்கான பீட்டர்சன் பனி மலையின் மூன்றில் ஒரு பாகம், கடந்த மூன்று ஆண்டுகளில் உடைந்து காணாமல் போயிருப்பதும் தெரிய வந்துள்ளது.
பனி மலைகளும் அடுக்குகளும் உடைந்து சின்னாபின்னாவாகி வருவது குறித்து ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் லூக் கோப்லான்ட் கூறுகையில்,
வட துருவத்தை ஒட்டியுள்ள, கனடிய பகுதிகளில் பனி அடுக்குகள் உடைய ஆரம்பித்திருப்பது கடந்த ஆறு ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. முதலில் வார்ட் ஹன்ட் பனி மலைகு உடைய ஆரம்பித்தது. பின்னர் அய்ல்ஸ் பனி மலை உடைந்தது. இப்போது அந்த மலையே சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.
தற்போது மேலும் மூன்று துண்டுளாக பனி மலை உடைந்திருப்பது, உலக வெப்பநிலை மாற்றம் காரணமாக நடந்திருக்கலாம் என அனுமானிக்கிறோம் என்றார்.
தற்போது கனடாவின் ஆர்க்டிக் பகுதியில், ஐந்து பெரிய பனி அடுக்குகள் மட்டுமே உள்ளன. இவையும் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு எந்த சைசில் இருந்தனவோ அதை விட பத்தில் ஒரு மடங்கு அளவுக்கு சுருங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, 17 April 2008
'டேஞ்சர்'-மூன்றாக உடைந்த ஆர்க்டிக் பனி அடுக்கு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment