லண்டன் : இதுவரை இருந்த ரஷ்ய அதிபர்களில் அதிகம் மேலை நாட்டினரால் அறியப்பட்டவர் இப்போது அதிபராக இருக்கும் விளாதிமிர் புடின்தான். மிகவும் அமைதியாக இருந்து, தாழ்ந்திருந்த ரஷ்ய பொருளாதாரத்தை உலக அளவில் நிமிர்ந்து நிற்க செய்தவர். பொதுவாக, இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அதிகம் வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்பவர். இப்போது இவரைப்பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலகிராப் பத்திரிக்கையில் வந்துள்ளது. 56 வயதான புடின், அவரது வயதில் பாதி வயதே ஆன 24 வயது ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை திருமணம் செய்யப்போகிறாராம். 1983 ம் ஆண்டு தாஷ்கன்டில் பிறந்த அலினா, சிட்னி மற்றும் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா சார்பாக விளையாடியவர். இப்போது ரஷ்ய பார்லிமென்டில் உறுப்பினராக இருக்கிறார். ரஷ்ய பத்திரிக்கையான மாஸ்கோவ்ஸ்கியின் செய்தியாளர் ஒருவர் சொன்னதாக டெய்லி டெலகிராப் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. மே மாதம் அதிபர் பதவியில் இருந்து புடின் விலக இருப்பதாகவும், ஜூன் மாத மத்தியில் ( அனேகமாக 15ம் தேதி ) இவர்களது திருமணம், புடினின் சொந்த ஊரான செயின்ட்.பீட்டர்ஸ்பர்க்கில் நடக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் கே.ஜி.பி உளவாளியான புடின், அவரது மனைவி 50 வயதான லுட்மில்லாவை விட்டு பிரிந்து விட்டதாக வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும், இரண்டு மாதங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி குறித்து கிரம்ளினில் இருந்து ஒரு பதிலும் இதுவரை வரவில்லை.
Thursday, 17 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment