Thursday, 17 April 2008

இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 சிங்கள மீனவர்கள் கைது

தூத்துக்குடி : இந்திய கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 4 சிங்கள மீனவர்கள், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் கைதி செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீமால் சமாந்து(35), ஜோசப் ஜயனா (37), அந்தோனி சுலேந்ரா (45) மற்றும் ஜோசப் டார்லி (40) ஆகிய நான்கு பேர், கடந்த வெள்ளியன்று விசைப்படகு மூலம் மீன்பிடிப்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை, இந்திய எல்லையை கடந்ததற்காக இந்திய பாதுகாப்பு படையினரால் கைதி செய்யப்பட்டுள்ளனர். நீரோட்டத்தின் போக்கில் வழி தவறி வந்துவிட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

ttpian said...

i thing they have plans to see Nayananthara,Thrissha,shreya?