Thursday, 17 April 2008

கடந்த மார்ச்சில் படைத்தரப்பில் உயிரிழப்புகள் அதிகரிப்பு இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஹரிகரன்

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடந்த மார்ச் மாதம் வன்னிக் களமுனைகளில் இடம்பெற்ற உக்கிர சமர்களில் இராணுவத்துக்கு ஒப்பீட்டளவில் முன்னரை விட இழப்புக்கள் அதிகமாக எற்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ முன்னாள் புலனாய்வு அதிகாரி கேணல் ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கேணல் ஹரிகரன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 2005ஆம் ஆண்டு டிசெம்பர் முதல் இருத்தரப்புக்குமிடையில் இடம்பெற்று வரும் மோதல்களில் படைத்தரப்பில் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் அறிக்கையிட்டிருக்கும் 1501 பேரில் 305 பேர் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இழப்பை கோடிட்டுக் காட்டும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் 386 ஆகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்புக்கான நிலையத்தின் தகவலின் அடிப்படையில் பார்த்தால் கடந்த மார்ச்சில் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட குறைவடைந்த உயிரிழப்புக்களே ஏற்பட்டுள்ளதாக கணிக்க முடிகிறது.

இதனடிப்படையில் கடந்த மார்ச் மாதமளவில் படைத்தரப்பின் உயிரிழப்புக்களில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தென்படுவதாக தெரிவித்துள்ளார்

1 comment:

ttpian said...

if hariharan say,we never oppse it!
Despite his ideas,SLA going towards backway!