Thursday, 17 April 2008

அமெரிக்காவில் படிப்பு: மாணவர் தங்க கூடுதல் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் படிக்கும் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள், அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை பார்க்கும் காலம் 12 மாதங்களில் இருந்து 29 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுக் கும், எச் - 1பி பாஸ்போர்ட் ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு நிறுவனங்களும் தவித்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்த புதிய திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கப் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது, அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை பயிற்சி பெற அளிக்கப்பட்டு வரும் காலம் 17 மாதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்கள் வேலை பார்த்தபடியே, ஆறு ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதிக்கும் எச் - 1 பி விசாவையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்காவில் வேலை பார்ப்போர், 12 மாதங்களுக்குள் எச்-1பி விசா வாங்க முடியாது. 12 மாதங்களுக்கு பிறகு அவர் கட்டாயம் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. புதிய திட்டத்தின் படி, எப்-1 விசாவில் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் அங்கேயே படித்து முடித்து, எச் - 1 பி விசா பெற்று அங்கேயே வேலையை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

No comments: