ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வன்னியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மீதான விமானத் தாக்குதலுக்கு பின்னர் விமானப்படையால் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியினையும் பெற முடியவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரசாரியாக தினமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி மீது மீகை ஒலி தாக்குதல் விமானங்கள் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது தாக்குதல் நடத்தி வருவதாகவும் எனினும் இந்த தாக்குதல்களினால் விடுதலைப்புலிகளின் படைக்கட்டுமானங்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை மக்களை ஏமாற்றவும் படையினருக்கு விடுதலைப்புலிகள் தொடர்பாக தோன்றியுள்ள அச்ச நிலையை போக்கவுமே ஸ்ரீலங்கா அரசாங்கம் வன்னி மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தாக்குதல்களின் பெறுபெறுகள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகள் குறித்து இராணவ புலனாய்வு பிரிவு வழங்கும் தகவல்களுக்கு ஏற்பவே விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டு வருவதாகவும் அவ்வாறெனின் இராணுவ புலனாய்வு பிரிவின் செயல்பாடுகள் வன்னியில் முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் இலக்குகள் குறித்து துல்லியமான தகவல்களை வழங்க முடியாதிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment