கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கின்றார். இலங்கைத் தீவில் வடக்கும் கிழக்கும் ஈழத்தமிழர் களின் பூர்வீகத் தாயகம். அங்கு தனியான மொழி, தனியான பண்பாடு, தனியான இனத்துவப் பரம்பல், தனியான வாழ்க்கைமுறை என்பவற்றோடு சரித்திர காலம் முதல் தனியரசு அமைத்துத் தம்மைத்தாமே ஆண்டு வந்தனர் தமி ழர்கள்.19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அப்போது இலங்கைத் தீவை ஆக்கிரமித்து நின்ற ஆங்கிலேயக் கால னித்துவவாதிகள் இத்தீவு மீதான தமது ஆட்சியதிகாரத்தை நிர்வாக ரீதியாக இலகுபடுத்துவதற்காக, இத்தீவில் சரித்திர காலந்தொட்டு வெவ்வேறாக இருந்த தமிழர் தேசத்தையும், சிங்களவர் நாட்டையும் ஒன்றிணைத்தனர். சுமார் 115 ஆண்டுகள் கழித்து இத்தீவை விட்டுத் தாங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் நேர்ந்தபோது, அதே இணைந்த கட்ட மைப்புடன் இலங்கைத் தீவில் எண்ணிக்கையில் பெரும் பான்மையினரான சிங்களவரிடம் தீவின் ஆட்சி அதிகா ரத்தை ஒப்படைத்து அதன் மூலம் எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையினரான தமிழர்களினதும் அவர்களது தேசத் தினதும் தலைவிதியைக் கூடச் சேர்த்துக் கையளித்து விட்டு வெளியேறினர் ஆங்கிலேயர்.
ஆங்கிலேயர் இழைத்த அந்த வரலாற்றுத் தவறின் விளைவை இலங்கைத்தீவு இன்னும் பெரும் போர்ப் பூகம் பமாக எதிர்கொண்டு நிற்கின்றது.எண்ணிக்கையில் பெரும்பான்மை என்ற "ஜனநாயகக் கேலிக்கூத்தின்" சாதக நிலையைத் தனக்கு வசமாகப் பயன்படுத்தித் தமிழர் தேசத்தின் தனித்துவ இன அடை யாளத்தையும், வரலாற்று விழுமியங்களையும் சமூகக் கட் டமைப்பபையும் நன்கு திட்டமிட்ட முறையில் அழித் தொழிக்கும் கபடத் தந்திரோபாய நடவடிக்கையைத் தென் னிலங்கைச் சிங்களம் கடந்த ஆறு தசாப்த காலமாக முன் னெடுத்து வருகின்றது.இலங்கைத்தீவின் வடக்குகிழக்குப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தைச் சிதைப்பதன் மூலம் தமது தாயக மண்மீது அவர்களுக்கு உள்ள வரலாற்றுப் பாந்தயத்தை தனியுரிமையை இல்லா தொழித்துச் சின் னாபின்னமாக்கித் தமிழர் தாயகத்தையும் சிங்களவர் தேசத்தின் பகுதி என்று நிலை நிறுத்துவதற்காக சிங்க ளம்அதிதீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இவ்வாறு தமிழர் தேசத்தின் தனித்துவத்தை சிதைத்து அழிக்கும் சிங்களத்தின் கபடத் திட்டத்தில் பிரதான அங்கமே திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றமாகும்.தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளினால் பேரினவாத மேலாதிக்க நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குள்ளநரித்தன நடவடிக்கையினால் கிழக்கில் தமிழர் தாயகத்தின் பெரும்பகுதி கப ளீகரம் செய்யப்பட்டு பறிபோயுள்ளது மட்டுமல்லாமல், தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் பூகோள ரீதியாக புவியியல் நிலத் தொடர்பு ரீதியாக சிங்களக் குடியேற்றப் பிரதேசங்கள் மூலம் துண்டாடப்பட்டும் இருக்கின்றன.சிங்களத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் சட் டங்களை இயற்றி, தமிழர் தேசத்தை அடக்கி, ஒடுக்கி, அழித்துவரும் கொழும்பு ஆட்சி அதிகாரம் ஒருபுறம் அதே சட்ட உபாயங்கள் மூலம் தமிழர் தாயகத்தின் நிர்வாகத்தை வடக்கு கிழக்கு என இரண்டாகத் துண்டாடும் அதேசமயம் மறுபுறம் சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் அந்தத் துண்டிப்பை ஸ்திரப்படுத்தியும் வருகின்றது.இப்படி ஓரினத்தின் தனித்துவத்தைச் சிதைத்து அழிக் கும் உள்நோக்கோடு முன்னெடுக்கப்படுகின்ற பேரின வாதச் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையுமே இரா. சம்பந்தன் எம்.பி. தமது நாடாளுமன்ற உரையில் அம்பலப் படுத்தியிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் 75 வீதமானோர் தமிழ் பேசும் மக் கள். ஆனால் கிழக்கில் அரச திணைக்களங்களில் 237 சிங்க ளப் பட்டதாரிகள் மூலம் பதவிவெற்றிடங்களை அரசு அண் மையில் நிரப்பியிருக்கின்றது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.படையினருக்கு வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் திருகோணமலையிலும் பொத்துவிலிலும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களப்படையினர் இங்கு கூட்டி வந்து குடியேற்றப்படுகின்றனர்.திருகோணமலை நகருக்கு அண்மையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் "லவ்லேன்" பகுதியில் சிங்கள வர்களை மட்டும் விசேடமாகக் குடியேற்றும் நோக்கத்தோடு ஒரு தனி வீடமைப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.போதாக்குறைக்கு யுத்த கொடூரத்தால் தமிழர்கள் இடம் பெயர்ந்த பிரதேசங்களுக்கு சிங்களவர்கள் அரச ஆதர வுடன் கூட்டி வரப்பட்டு குடியேற்றப்படுகின்றனர்.தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பொன் விளையும் மண் திட்டமிடப்பட்ட விவசாயக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் பாதிப்புறும் சிங்களவர்களுக்கு குறிப் பாகக் கிழக்கில் உரிய நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்கி, ஊக்குவித்து அவர்களது குடியேற்றங்களுக்கு ஆதரவு தரும் அரசு, "ஒரு கண்ணில் நெய் மறுகண்ணில் சுண்ணாம்பு' என்பது போல, அங்கிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் கைங்கரியத்தையும் "பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில் முன்னெடுக்கின்றது.இவற்றை எல்லாம் விவரமாக விலாவாரியாக எடுத் துரைத்திருக்கின்றார் சம்பந்தர் எம்.பி.இந்த உண்மையை சர்வதேசம் புரிந்து கொள்ளுமா? புரிந்து கொள்ளுமாயின் தமிழரின் விடுதலைப் போராட் டத்தின் நியாயத்தையும் அது புரிந்து கொண்டதாகிவிடும்
Sunday, 13 April 2008
தமிழர் தாயகத்தை சிதைத்து அழிக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
TNA must not only speak against the Sinhalasisation of TH in Parliament but also take quick action at the UN and UNICEF against the violation of these organisation declaration and UN codes.
The Sinhalese know how to deceive the world and the Tamils were ignorant at that time (1950s)to appeal to world bodies and the international communities. The Sinhalese at that time duped the world saying that all internal affairs of a country cannot be discussed at the UN. But NGO's have tore away that concept by their vigilant work and presentation of atrocities committed nuder the veil of 'nternal affairs of a country'. Sri-Lankan Sinhalese with the help of Tamil traitors like Luxman Kadirgamar (who is not a typical Tamil like Prabaharan, Ananda sangaree, Kumarasooriar, Devanayagam and their elk had usurbed the Tamil Homeland.
The tamil dispora is now very enlightened and the young generation will I hope leave no stone unturned to bring the tragedy facing the Tamils to international fora and courts. Eternal vigilance is the watch- word of democracy.Dr C P Thiagarajah
Why full text of Sampanthan's speech is not given in any Tamil web site?
This how Tamils make themselves fools?
It is important to have it in full for all to access.
Post a Comment