கிழக்கு மக்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் சீறும் படை என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டள்ளது. அதன் முழுவிபரமும் இங்கே தரப்படுகின்றது.
கிழக்கு மக்களின் கவனத்திற்கு
அன்பார்ந்த மானத்தமிழ் மக்களே!
விழித்திருக்க வேண்டிய காலமிது, சிங்கள பேரினவாத அரசினதும், இந்திய அரசினதும், கபடநோக்கத்தின் ஊடாக தமிழர் தாயகத்தை வடக்கு என்றும் கிழக்கு என்றும் பிரித்து அந்த நிலப் பிரிப்பை நியாயப்படுத்தி உலகளாவிய அரசியல் அங்கீகாரத்தை பெற்று அந்த அங்கீகாரத்தின் ஊடாக கிழக்கில் சிங்களவர்களை பெரும்பான்மை ஆக்குவதற்காகவும், தமிழர்களுடைய தொன்மை வரலாற்றுத் தடங்களை அழித்து அதில் பௌத்தமத சின்னங்களை நிறுவி கிழக்கு சிங்களவர்களினுடைய தாயகம் என்பதை காட்டுவதற்காகவே இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலும், எடுத்துக் காட்டாக மட்டக்களப்பு குடும்பி மலையில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.
இதை மறந்தால் கொக்கட்டிச்சோலை சிவன் கோவிலும் கண்டி தலதாமாளிகையின் ஒரு அங்கமே என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே இந்த தேர்தலில் எதிர்த்து வாக்களிப்பதோடு மகிந்த அரசினுடைய கூலிப்பட்டாளங்களுக்கு அரசியல் மகிடம் சூட்டாமல் உங்களது பலமான வாக்கை வடக்கு கிழக்கு இணைந்ததுதான் தாயகம் எனகூறி உங்களது காலடிக்குவரும் எதிர்த்தரப்பினர் யாராவது இருந்தால் அவர்களுக்கு வாக்களித்து உங்களது எதிர்ப்பை காட்டுங்கள்.
அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விடுங்கள். நீங்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டால் உலகிற்கு பெரும் செய்தியை சொல்பவர்களாக இருப்போம். அது எமக்காக போராடும் தமிழர் படைக்கு பலமாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு செயற்படுவோம்.
இல்லையேல் மகிந்த அரசு கிழக்கில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று உலகிற்கு காட்டி கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில், உலக நாடுகளிடம் இருந்து, நிதி மற்றும் பொருளாதார நன்கொடைகளைப் பெற்று, அதை எம்மக்களை கொன்றொழிக்கின்ற போருக்கும், சிங்களதேச அபிவிருத்திக்கும் திருப்பிவிடும் ஒரு நடவடிக்கைக்காகவே இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாடகம்.
எனவே இத்தேர்தலை புறக்கணிப்பது, அல்லது எதிர்;த்தரப்பினர்க்கு வாக்களிப்பது உங்களின் கையில், அப்படி இல்லாமல் மகிந்த அரசு கட்சிக்கும் அதனுடைய கூலிப்பட்டாளங்களான துணை இராணுவக் குழுக்களுக்கும்; வாக்களித்தால் நாங்கள் எங்களது நடவடிக்கையை செய்ய தூண்டுபவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். என்பதை வேதனையோடு தெரியப்படுத்துகின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி
சீறும் படை
மட்டக்களப்பு மாவட்டம்.
Friday, 11 April 2008
கிழக்கு மக்களின் கவனத்திற்கு”
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment