ஜே வி பியின் பிளவுக்கு இந்தியாவே பின்புலமாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் ஜே வி பி கொண்டுள்ள கொள்கை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர் அனுபாமா எம் ரணவன தெரிவித்துள்ளார். சிங்களவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் மேற்கத்தைய ஊடுருவலை எதி;ர்க்கின்றனர் எனினும் அவர்கள் இந்திய தலையீட்டை ஆதரிப்பதாக கிரௌவ்ன்ட் வியூஸ் என்ற இணைத்தளத்தில் அனுபாமா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளநிலையில் அதனை ஜே வி பி எதிர்த்துவருகிறது. இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான ஆலோசனைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் இந்தியாவே அதிகப்பங்கை தற்சமயம் வகித்து வருகிறது இந்தநிலையில் தமது தீர்வு யோசனைக்கு ஜே வி பி இடையூறாக இருக்கும் என்ற அச்சத்தில் இந்தியா ஜே வி பியின் பிளவுக்கு காரணமாக இருக்கலாம் என அனுபாமா ரணவன தெரிவித்துள்ளார்.
Saturday, 12 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment