கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த மலையாள படங்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்க அசாமி மொழிப்பட இயக்குனர் ஜானு பருவா தலைமையில் 8 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 28 படங்களை பார்வையிட்டு, தேர்வு செய்தது. விருதுப் பட்டியலை கேரள கலாசார விவகாரத்துறை மந்திரி எம்.ஏ.பேபி நேற்று வெளியிட்டார்.
அதன்படி, `பரதேசி' படத்தில் நடித்ததற்காக மோகன்லால் சிறந்த நடிகர் விருது பெறுகிறார். `ஒரே கடல்' படத்தில் நடித்ததற்காக மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை விருது பெறுகிறார். `அடையாளங்கள்' என்ற படம் சிறந்த படமாகவும், அப்படத்தை இயக்கிய எம்.ஜி.சசி சிறந்த டைரக்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மனம் கவர்ந்த படமாக `கதா பறயும்போல்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணிப் பாடகராக விஜய் ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். `நிவேத்யம்' படத்துக்காக, எம்.ஜெயச்சந்திரன், சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Tuesday, 8 April 2008
சிறந்த நடிகர்-நடிகையாக தேர்வு:மோகன்லால், மீரா ஜாஸ்மினுக்கு கேரள அரசு விருது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment