Tuesday, 8 April 2008

விசேட அதிரடிப்படையினர் இரு இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர்!!!!!!!

இன்று 08.04.2008 செவ்வாய்க் கிழமை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் த.வி.புலிகளைக் குறிவைத்து பதுங்கி இருந்து இரு இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஊறனியில் சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை வற்புறுத்தி காட்டிற்கு விறகு வெட்ட அழைத்துச் சென்றுள்ளனர். இதே வேளை த.வி.புலிகளைக்குறி வைத்து வீதி ஓரம் பதுங்கி இருந்த அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் வந்த குழு மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் கோமாரி இராணுவ முகாமைச்சேர்ந்த 2 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இதைவிட இன்னொரு இராணுவத்தினனும் ஒரு பொதுமகனும் காயம் அடைந்துள்ளனர்.
06.04.2008 அன்று விசேட அதிரடிப்படையினரின் பதுங்கித்தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டும் இன்னொருவர் காயமடைந்தும் உள்ளார். தப்பிய மூன்றாம் நபர் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்மூவரும் வறிய விறகு வெட்ட சென்ற முஸ்லிம் பொதுமக்களாவர்

No comments: