சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாணம் ஜிலின். இங்கு வசிக்கும், யுன் என்பவர், ஒரு ஆமையை வளர்த்து வருகிறார். தனது பெரும்பாலான நேரங்களை, ஆமையுடன் செலவிடுவார். மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில், ஆமையுடன் விளையாடுவது, இவரது வழக்கம். ஒரு நாள், இதுபோல் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார், யுன். விளையாட்டாக, சிகரெட்டை, ஆமையின் வாய் மீது வைத்து,”முடிந்தால், “தம்’ கட்டு, பார்ப்போம்’என கூறினார். என்ன ஆச்சர்யம்? அந்த ஆமை, வாயில் சிகரெட்டை பற்றியபடி, புகையை உள்ளே இழுக்க துவங்கியது. அந்த புகை, ஆமைக்கு ஒருவித இனம் புரியாத சுகத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். சிகரெட் முடியும் வரை, புகையை, உள்ளே இழுத்து,ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போன யுன், தினமும், இதேபோல், ஆமைக்கு சிகரெட் பிடிக்க கற்றுத் தந்தார். இப்போது, சிகரெட் பிடிப்பதில், மனிதர்களையே மிஞ்சி விட்டது,அந்த ஆமை.இதை உலகம் முழுவதற்கும் தெரியப்படுத்த விரும்பிய யுன், பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஆமையை சிகரெட் பிடிக்கச் செய்தார். நான்கே நிமிடங்களில், ஒரு முழு சிகரெட்டையும் மீதம் வைக்காமல் ஊதி தள்ளி விட்டது. இது பற்றி யுன் கூறுகையில், “தினமும் நான், சிகரெட் பிடிக்கும்போதெல்லாம், ஆமைக்கும் சிகரெட் தர வேண்டும். இல்லையெனில், அதற்கு கோபம் வந்து விடும். சிகரெட் பழக்கத்திற்கு, எனது ஆமை அடிமையாகிவிட்டது’என்றார். மனிதர்களை போல, குரங்குகளும் சிகரெட் பிடிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான். ஆனால், ஆமை சிகரெட் பிடிப்பது என்பது வியப்பான விஷயமாகத் தான் உள்ளது. அதற்காக, இந்த ஆமை, ரஜினி ஸ்டைலில், சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு பிடிக்குமோ? என்றெல்லாம் விபரீதமாக கற்பனை செய்து விட வேண்டாம்.
Tuesday, 8 April 2008
சிகரெட் பிடிக்கிறது ஆமை : சீனாவில் நடக்குது இந்த கூத்து(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment