Wednesday, 9 April 2008

திருச்சொரூபம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் சர்வதேச சமூகம்.(திவயின)!!!!!

மருதமடு மாதா திருச்சொரூபம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் தலையீடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் காரணமாகவே பேராயர் இராயப்பு ஜோசப் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றதாக சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை கத்தோலிக்க பக்தர்களுக்கு மடு மாதாவை தரிசிக்க வாய்ப்புகள் அற்றுப் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். ‘விடுதலைப் புலிகள் இக்கு தேவை மற்றுமொரு கொசோவோவா’ என்ற தலைமைப்பில் நேற்றைய தினம் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கையை காப்போம் அமைப்பு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மடு தேவாலயம் தொடர்பான சம்பவத்தை இலங்கை பேராயருக்கு கூட அறிவிக்காமல் மன்னார் ஆயர் வத்திக்கான் சபைக்கு அறிவித்துள்ளார் எனவும், இதன் மூலம் சர்வதேச தலையீட்டையே மன்னார் ஆயர் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

1 comment:

T.Douglas said...

I admire the action taken by the Bishop of Mannar Rayappu Joseph of granting permission to the priests to take Our Lady of Madhu statue to a safer place to protect from destruction by the Buddhist Soldiers of the Sri Lankan Army.