வடபோர் முனையின் மிகவும் அதிகம் பாதுகாப்புக்களைக் கொண்ட முகமாலைப் பகுதிக்குப் பொறுப்பான சிறிலங்காப் படையின் கட்டளைத் தளபதி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயடைந்துள்ளதாக srilanka படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ். குடாநாட்டின் முகமாலைப் பகுதியில் நிலைகொண்டுள்ள பற்றலியன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
லெப். கேணல் தரத்தை சேர்ந்த இந்த அதிகாரிக்கு உடனடிச் சிகிச்சைகள் பலாலி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முகமாலைப் பகுதியின் முன்னணி அரண்களைப் பார்வையிடச் சென்ற போதே இவர் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment