Friday, 18 April 2008

ஈழத் தமிழர்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்

ஈழத் தமிழர்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.



கடந்த 19ஆம் நாள் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்குச் சென்று, ரஜீவ் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினியைச் சந்தித்திருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வீரமணி, நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கோரிய சோனியா காந்தி, மற்றும் நளினியைச் சந்தித்துள்ள பிரியங்கா காந்தியின் மனிதநேயத்தை பாராட்டினார்.

ரஜீவ் கொலையை வைத்து விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராகக் கருத்துக்கூறி வருபவர்கள் இனியாவது திருந்துவார்களா எனவும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோர்வே அரசாங்கம் அண்மையில் அழைப்பு விடுத்திருப்பது போன்று ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசு அதில் தலையிட வேண்டும் எனவும், வீரமணி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

No comments: