சிறுவர்களை தடுத்து வைத்திருக்கும் துணைப்படைப் பிள்ளையான் குழு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என, நியூயோர்க்கை தளமாகக்
கொண்ட வொச்லிஸ்ட் ஆயுதப் போராட்டமும், சிறுவர்களும் என்ற அனைத்துலக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
துணைப்படைப் பிள்ளையான் குழுவினர் சிறுவர்களைக் கடத்திச் செல்வதற்கு சிறீலங்கா அரசும் துணை போவதாக, இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களைக் கடத்தில் செல்லும் ஆயுதக் குழுவொன்றுடன் அரசாங்கம் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது உற்றுநோக்க வேண்டிய கண்டனத்திற்குரிய விடயம் என, இந்த அமைப்பின் இயக்குனர் ஜுலியா பறீட்சன் கண்டனம் தெரிவித்தார்.
இ;வ்வாறான கூட்டணி மூலம் தேர்தல் காலத்தில் சிறுவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகம் இடம்பெற வாய்ப்பு இருப்பதையும் ஜுலியா சுட்டிக்காட்டினார்.
பிள்ளையான் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்களை விடுதலை செய்வதற்கு, அந்தக் குழு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தை ஆதாரம்காட்டி, வொச்லிஸ்ட் ஆயுதப் போராட்டமும், சிறுவர்களும் என்ற அனைத்துலக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களும், ஆயுத மோதல்களும் என்ற அமைப்பு சிறீலங்கா தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்துவரும் நிலையில், வொச்லிஸ்ட் என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 14ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்த இதே மனித உரிமைகள் அமைப்பு, போர் நடைபெறும் பகுதிகளிலும், ஏனைய இடங்களிலும் சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகக் கண்டனம் தெரிவித்திருந்தது.
Friday, 18 April 2008
பிள்ளையான் குழு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது--வொச்லிஸ்ட் ஆயுதப் போராட்டமும், சிறுவர்களும் என்ற அனைத்துலக அமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment