சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன் அணியை வென்றது.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் ஹேடனும், சுரேஷ் ராய்னாவும் அபாரமாக விளையாடினர். ராய்னா 37 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களுடன் வெளியேறினார்.
ஹேடன் 81: சதத்தை எட்டுவார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஹேடன், ராய்னா ஆட்டமிழந்த அடுத்த 4-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். சுமார் 40 அடி தூரத்திலிருந்து மும்பை கேப்டன் ஹர்பஜன்சிங் கச்சிதமாகப் பந்தை ஸ்டம்பில் எறிந்து அவரை வெளியேற்றினார். 46 பந்துகளில் 81 ரன்களைச் சேர்த்தார் ஹேடன். அதில் ஒரு டஜன் பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் உள்படும்.
அவரைத் தொடர்ந்து சென்னை அணிக் கேப்டன் தோனி கிடுகிடுவென 16 பந்துகளில் 30 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
லாங் ஆன் திசையில் தோனி விளாசிய "சிக்ஸர்' பந்தைக் காணவில்லை. இதையடுத்து புதிய பந்துடன் ஆட்டம் தொடர்ந்தது.
அசத்திய அபிஷேக் நாயர்: மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஞ்சி 2 ரன்களுக்கு வெளியேறினார். ஜயசூர்ய 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். எப்படியும் சென்னை வென்று விடும் என்ற நிலையில் அபிஷேக் நாயரும், ஹர்பஜன் சிங்கும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
அபிஷேக் நாயர் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும், ஹர்பஜன் சிங் 14 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 28 ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவர் மிகவும் பரபரப்பாக அமைந்தது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 2 பந்துகளில் பவுண்டரிகளை வழங்கினார் ஜோகிந்தர் சர்மா. ஒரு "நோ-பால்' போட்டார். இருப்பினும் அதன் பின்னர் அபாரமாகப் பந்துவீசி சென்னைக்கு வெற்றி தேடித் தந்தார்.
Wednesday, 23 April 2008
பரபரப்பான ஆட்டத்தில் தோனி அணி வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
//
கடைசி ஓவர் மிகவும் பரபரப்பாக அமைந்தது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 2 பந்துகளில் பவுண்டரிகளை வழங்கினார் ஜோகிந்தர் சர்மா. ஒரு "நோ-பால்' போட்டார்.
//
இந்த நோ பாலில் நாயர் எடுத்த அந்த 1 ரன்தான் அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. ஃப்ரீ ஹிட் பாலை ஆஷிஷ் நெஹரா சந்திக்கும்படி ஆகிவிட்டது :-(
Post a Comment