பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது பெண்கள் சாப்பிடும் சாப்பாட்டில் தான் உள்ளது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் நடத்திய ஆராய்ச்சி மருத்துவ ஜர்னல் ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறந்து இருப்பதற்கும் ஆண் குழந்தைகள் பிறப்பது குறைந்து போனதற்கும் பெண்கள் கொழுப்பு குறைவான உணவை சாப்பிடுவதும், காலை உணவை தவிர்ப்பதும் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இ, மற்றும் பி.12 ஆகியவை அதிகம் உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். பெண்கள் செரியல் (அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு) அதிகமாக சாப்பிடவேண்டும். வாழைப்பழம் அதிகமாக சாப்பிடவேண்டும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். 400 கலோரி சத்து உள்ள உணவை தினமும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ மாத்ïஸ் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள்.
Wednesday, 23 April 2008
வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment