ஈராக்கில் நடக்கும் புனிதப்போரில் உலக முஸ்லிம்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று அல்கொய்தா இயக்கத்தின் தளபதி அல் ஜவாஹிரி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
கேள்வி-பதில்
அல் கொய்தா இயக்கம் தொடர்பாக இணையதளம் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்த இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், பின்லேடனின் வலது கரமாக திகழ்பவருமான அல் ஜவாஹிரி பதில் அளிப்பார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து வந்து குவிந்த கேள்விகளில் 100கேள்விகளுக்கு அவர் 2-வது கட்டமாக பதில் அளித்தார். இந்த பதில்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு அல்கொய்தாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஈராக் போரில் கலந்து கொள்ளுங்கள்
"புனிதப்போர் நடக்கும் இடங்களுக்கு உலக நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் விரைந்து சென்று அவற்றில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஈராக்கில் நடக்கும் புனிதப்போரில் உலக முஸ்லிம்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புனிதப்போராளிகளை முஸ்லிம்கள் ஆதரிக்கவேண்டும்.
புனிதப்போராளிகளுக்கு ஆதரவு அளிக்க தவறும் முஸ்லிம் நாடுகள், அல்லாவின் தீர்ப்புக்கு பயந்து நடக்க வேண்டும். அவை புனிதப்போராளிகளுக்கு தேவையான பணத்தையும், படைவீரர்களையும் கொடுத்து உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்லாமின் கோட்டையாக...
ஈராக்கை இஸ்லாமின் கோட்டையாக முஸ்லிம்கள் மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''
இவ்வாறு அல்ஜவாஹிரி அந்த பதில்களில் கூறி இருக்கிறார்.
Wednesday, 23 April 2008
ஈராக் புனிதப்போரில் உலக முஸ்லிம்கள் கலந்து கொள்ளவேண்டும் அல்கொய்தா தளபதி அல் ஜவாஹிரி கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment