விமான தாக்குதல் நடத்தப்படும் முன்னர் அது குறித்த தகவல்கள் விடுதலைப்புலிகளை சென்றடைவதாக விமானபடைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழ்ச் செல்வனுக்கு பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக தாக்குதல்களை நடதத முடியாது போயுள்ளதாக, கூறப்படுகிறது. இராணுவ புலனாய்வுதுறையினா,; தாக்குதல் நடததப்பட வேண்டிய இடம் குறித்த தகவல்களை முதலில் வழஙகுவர். பின்னர் தாக்குதல் நடத்தப்படும் இடம் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு குண்டுகளை பொருத்த பொறியியல் பிரிவினருக்கு 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இதன் பின்னர் விமானிக்கு அறிவிக்கப்படும். விமானி ஆயத்தங்களை மேற்கொள்ள 17 நிமிடங்கள் வரை செல்லும். இந்த 37முதல் 40 நிமிடங்களில் புலிகளின் தலைவர்களுக்கு தகவல்கள் கிடைத்து அவர்கள் தம்மை தற்காத்து கொள்ள போதுமான அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்கள் புலனாய்துறைக்குள் இருந்தே புலிகளுக்கு கிடைப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தகவல் பரிமாற்றம் மூலம் பல கோடி ரூபாய்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. தகவல் உறுதிப்படுத்தப்பட்டவுடன் புலிகளுக்கு அதனை தெரியப்படுத்த ஒற்றருக்கு சர்வதேச அழைப்புச் செலவு மாத்திரமே போகும் நிலையில் பாரிய நிதியை செலவிட்டு மேற்கொள்ளப்படும் விமான தாக்குதல்களின் பலன்கள் கிடைக்காது போவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த தடையேற்பட்டாலும் தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளதாக விமானப்படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய மிக் 27 விமான கொள்வனவு தொடர்பில் விமர்சனங்களை செய்வோர் தாக்குதல் விமானங்கள் குறித்து சரியாக அறியாதவர்கள் எனவும் உலகில் குறைந்த விலையிலும் பயன்படுத்த இலகுவான தாக்குதல் விமானம் மிக் 27 எனவும் விமானப்படைத்தரப்பினர் கூறுகின்றனர். இந்த விமானங்களுக்கான உதிரிபாகங்கள் குறைந்தவிலையில் ரஸ்யாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உதிரிபாகங்களை கொள்வனவு செய்வோர் அதிகளவான பணத்தை ஏப்பம் விடுவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. எவ்வளவு தரகு கூலியை பெற்று கொண்டாலும் 250 மில்லியன் டொலர்களுக்கு மேலதிக விலையில் எந்த தாக்குதல் விமானங்களும் விற்பனைக்கு இல்லை எனவும் அந்த தகவல்கள் தெளிவுபடுத்தி உள்ளன.
Saturday, 12 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment