Saturday, 12 April 2008

யாழ் பருத்தித் துறை வீதியில் குண்டு வெடிப்பு.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் படையினரின் தெடரணி மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பிற்பகல் 1.30 அளவில் மாலிச் சந்திக்கும் நெல்லியடிக்கும்; இடைப்பட்ட பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது ஒரு கைக் குண்டுத் தாக்குதல் என ஒரு தகவலும் கிளைமோர் தாக்குதல் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. குhயம் அடைந்த சிப்பாய் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து பலாலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: