Saturday, 12 April 2008

டாடாவின் வருமானம் ரூ.2 லட்சம் கோடியை தாண்டும்


மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல், ஆட்டோமொபைல், டீ தயாரிப்பு நிறுவனமாக திகழும் டாடா குரூப்பின் இந்த ஆண்டு ( 2007 - 08 ) வருமானம் 50 பில்லியன் டாலரை ( 2 லட்சம் கோடி ரூபாய் ) தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கியதை அடுத்து இந்த வருமானம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. டாடா நிறுவனத்தில் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். 2006 - 07 நிதி ஆண்டில் டாடா, 28.8 பில்லியன் டாலர் ( 1,15,200 கோடி ரூபாய் ) வருமானம் அடைந்திருந்தது. இங்கிலாந்தின் கோரஸ் நிறுவனம் மூலமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கல்சல்டன்சி சர்வீசஸ், டெலிகம்யூனிகேசன்ஸ் மற்றும் ரீடெய்ல் தொழில் மூலமாகவும் இந்த வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக டாடா சன்ஸ் லிமிடெட்டின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ஆலன் ரோஸ்லிங் தெரிவித்தார். சீனாவில் ஹைனன் தீவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த அவர், அங்குள்ள பத்திரிக்கையாளர்களிடம் இதை தெரிவித்தார். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனம் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியது. இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வாங்கிய மிகப்பெரிய நிறுவனம் இதுதான். சீனாவில் மட்டும் கடந்த வருடத்தில் டாடா நிறுவனத்தின் பொருட்கள் 650 மில்லியன் டாலருக்கு ( 2,600 கோடி ரூபாய் ) விற்பனை ஆகி இருக்கிறது.

No comments: