வடபகுதி போர் கள நிலவரங்கள் குறித்து அரசாங்க தரப்பில் எவ்வாறு கூறப்பட்டாலும் நிகழ்வுகள் அதற்கு மாறான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமது தரப்பின் இழப்புகளை அதிகமான வெளிப்படுததுவதில்லை. எனினும் பல படையினர் நாளாந்தம் படைகளத்திற்கு மீண்டும் திரும்பமுடியாத வகையில் காயங்களுக்கு உள்ளாகி வருவதாக அனுராதபுர வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடபகுதி மோதல்களில் காயமடையும் படையினர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கே கொண்டு செல்லப்படுகின்றனர், நாளாந்தம் பல படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படுகின்றனர். இவர்களில் அனேகமானோர் படுகாயமடைந்த நிலையில் அவர்களின் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை காணப்படுவதாக வைத்தியசாலையில் பணிப்புரிவோர் தெரிவித்துள்ளனர். தென் பகுதியில் உள்ள அரசாங்க உயர் அதிகாரி ஒருவரது சகோதரனின் மகன,; இராணுவத்தில் சேவையாற்றி வருகிறார். வடபகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் காயமடைந்த அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது சகோதரனின் மகனை பார்க்க வைத்தியசாலைக்கு இந்த அரச அதிகாரி சென்றுள்ளதாகவும் மோதலில் படுகாயமடைந்த சகோதரனின் மகன் ஒரு காலை இழந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலையில் தினமும் காயமடையும் படையினரில் அதிகமானவர்கள் இவ்வாறு தமது உடல் பகுதிகளை இழந்து வருவதாகவும் அந்த அரச அதிகாரி தனக்கு, நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தான் வைத்தியசாலையில் பணிபுரிவோரிடம் கேட்டதாகவும் இந்த சம்பவங்களை பார்த்து மனம் மரத்து போய்விட்டது என கூறிய வைத்தியசாலைப் பணியாளர்கள், இவ்வாறு பலர், நாளாந்தம் கால்களை இழந்து வருவதாக கூறியதாகவும் வேதனை அடைந்துள்ளார்
Saturday, 12 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment