எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடொன்றை எட்டும் நோக்கில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்சவை சந்திக்க உள்ளதாகத் தெரியவருகிறது.
ஜே.வி.பி.யின் கட்சி விதிமுறைகளை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீறியுள்ளதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டமையினால் அவருக்கு இந்த நிலைமை உருவானதெனவும், எனவே ஆளுங்கட்சி அமைச்சர்கள் விமல் வீரவன்சவுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்திற்கு பின்னர் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
Saturday, 12 April 2008
விமலை சந்திக்க அமைச்சர்கள் சிலர் முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment