பரந்தளவில் படை நடவடிக்கை மேற்கொள்வது பாதகமான விளைவுகளை தமது படைகளுக்கு ஏற்படுத்தும் என, சிறீலங்கா முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார்.
பரந்த படை நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அது பாரிய படைத்துறை உயிரிழப்புக்களையும், நிதி நெருக்கடியையும் தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1992, 93 காலப்பகுதியில் கிழக்கின் தளபதியாக இருந்தபோது பல படையணிகளை வழிநடத்தியதில் இருந்து இதனை உணர்ந்து கொண்டதாகவும், எனவே பரந்துபட்ட படை நடவடிக்கை தமது படைகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் நேரத்திலும், தற்பொழுதும் ஆயுதம் தரித்த குழுக்கள் எதுவும் இயங்கவில்லை எனவும் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார்.
சிறீலங்கா படைகளும், காவல்துறையினரும் மட்டுமே தற்பொழுது கிழக்கில் ஆயுதங்களுடன் நடமாடுவதாகவும், அவர் மேலும் கூறினார்.
சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்விலேயே , சிறீலங்கா முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இவற்றைத் தெரிவித்திருக்கின்றார்
Saturday, 12 April 2008
பரந்தளவு படை நடவடிக்கை இழப்பை ஏற்படுத்தும் - ஜானக பெரேரா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment