Saturday, 12 April 2008

கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய இளைஞன் மனித உரிமைகள் ஆணையகத்தில் சரண்

யாழ் குடாநாட்டில் வியாழக்கிழமை பகல் ஆயுததாரிகள் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் அவர்களிடம் இருந்து தப்பி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
26 அகவையுடைய இந்த இளைஞர் கஸ்தூரியார் வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாரண உடையில் ஆயுதங்களுடன் சென்ற 8 பேரடங்கிய குழுவினரே தன்னை கஸ்தூரியார் வீதியில் வைத்து கடத்திச் செல்ல முற்பட்டதாக தஞ்சமடைந்த இளைஞர் தெரிவித்தார்.
யாழ் நகரில் சிறீலங்கா படையினரது இறுக்கமான பாதுகாப்பின் மத்தியில் படைப் புலனாய்வாளர்கள் மட்டுமே ஆயுதம் தரித்துச் செல்ல முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: