Saturday, 12 April 2008

இலங்கையில் யுத்தம் முடிவுறாது--- வாசிங்டன் டைம்ஸ்

இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரானது சுனாமியை போல முடிவுறாது என அமரிக்க வாசிங்டன் டைம்ஸ் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. வாசிங்டன் டைம்ஸ்க்காக கொழும்பில் இருந்து செய்தியாக்கம் செய்துள்ள எமிலி வொக்ஸ் என்பவர் மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை செவ்விகண்டு அதனை வெளியிட்டுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக்குடும்பத்தினர் தமது கருத்தில் சுனாமி எப்போதும் முடிவுறாது எனக்கூறப்படுவதை போல இலங்கையிலும் யுத்தம் முடிவுறாது என குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்பாடு அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையின் பின்னர் இலங்கையில் போர் முடிவுறாது என்ற கருத்து பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்துள்ளதாக எமிலி வொக்ஸ் குறிப்பிட்டுள்ளாh

No comments: