Tuesday, 1 April 2008

பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல்!!

Vidhana Souda - Bangalore
பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங்களின் போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இதையடுத்து பெங்களூரில் தமிழ் சினிமா திரையிடப்படும் நடராஜ், சங்கீத், வினாயக் உள்ளிட்ட 9 தியேட்டர்களில் தமிழ் படங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

''தமிழ் சினிமாவை அனுமதிக்க மாட்டோம்'':

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்யும்வரை பெங்களூரில் தமிழ் சினிமா படங்களை ஓடவிடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இதையடுத்து கன்னட அமைப்பினர், பெங்களூர் தமிழ்சங்கத்துக்கு சென்றனர். தமிழ்ச் சங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அடித்து உடைத்தனர். 2 பேர் தமிழ்ச்சங்க அலுவலகத்துக்குள் சென்று துண்டு பிரசுரங்களை வீசி விட்டு ஓடினர்.

1 comment:

Anonymous said...

நாங்கள்தான் அடிக்குமேல் அடி வாங்கும் போது இந்திய மத்திய, மானில அரசு சிங்களவருக்கு ஆயுத உதவி செய்கின்றது.

கர்நாடகத் தமிழன் என்ன பாவம் செய்தான்? ஏன் அடி வாங்குகின்றான்?

காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்?

ஒரு ஈழத்தமிழன்