இத் தாக்குதலில் 19 முழுமையான இராணுவ உடலங்கள் எடுக்கப்பட்டும் 30மேற்பட்ட உடல்கள் சிதறியநிலையில் இருப்பதாகவும் 104 இராணுவத்தினரின் சடலங்களை படையினர் வசம் உள்ளதாகவும் 500 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் இவற்றை 12 பேரூந்துகளில் இறந்த, காயமடைந்த படையினரின் உடலங்கள் பாலாலிக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளதாக யாழ் பயணிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இறந்த படையினரில் மற்றுமொருதொகுதிச்சடலங்கள் முழுமையாக இல்லாத காரணத்தினால் அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் இராணுவ உடல்களை பார்வைக்காக வைக்கப்பட்ட இடத்தில் பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டுச்செல்கின்றனர்.

மிகப்பெருமெடுப்பிலான இப்படைநடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் தரப்பில் 25 போராளிகள் தங்களுடைய இன்னுயிர்களை தாய்நிலத்திற்காக ஆகுதியாக்கியுள்ளதாக விடுதலைப்புலிகளின் படைத்துறைப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இப் படைநடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரம் வருமாறு.
ரி.56-2 --- 34
ரி.56 --- 3
ஏகே எல்எம்ஜீ --- 05
பிகே --- 02
ஆர்பி.ஜீ உந்துகணைச் செலுத்தி 05
ஆர் பி ஜீ கவசத்துளைப்பு உந்துகணைகள் 07
ஆர்பிஜீ சாதாரண உந்துகணைச் செலுத்தி 21
தலைக்கவசம் 12
தண்ணீர்கன் 48
றவைகள் 8200
ஏகே றவைகள் கோர்வையுடன் 114
கிற் பக் 05
ரவை தாங்கி அணிகள் 27
குண்டு துளைக்காத அணிகள் 12
ஆர்பீஜி உந்துகணை தாங்கி அணி 01
பிகே ரவைகள் கோர்வையுடன் 1500
பிகே ரவைகள் தனி 400
ஏகே ரவைக் கோர்வைகள் 200
பிகே ரவைக் கோர்வைகள் 250
ஜீபிஎம்ஜி பெட்டிகள் 05
பாதணிகள் -9
ஏகேஎல்எம் ஜீ ரவைக்கூடு 03
பிகே ரவைக்கூடு 02
பிறப்பிளர் (ஆர்பிஜீ) 26
40 மில்லிமீற்றர் உந்துகணை செலுத்தி (சிங்கப்பூர்) ஏச் கே 03
கைக்குண்டுகள் 04
டோப்பிற்ரோ 01
வெடிமருந்து தொகுதி 03





2 comments:
ராஜபக்சே,பொன்சக்கோ மாமாவுக் கெல்லாம் நன்றி.
பாவம் ஏழைச் சிங்களவர்களும் நமது உடன் பிறப்புக்களும் கொடுக்கும் விலைதான் நெஞ்சைப் பிளக்கிறது.
Mahindha:Fonseka,where are u?
Fonseka: I have applied for 7 days leave!
Post a Comment