Friday, 25 April 2008

போர்டிங் பார்ஸ் குளறுபடி: சென்னையில் மூவர் கைது:

இந்தியாவின் சென்னை அண்ணா சர்வதேச வானூர்தி நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை (போர்டிங் பார்ஸ்) கைமாற்றிக்கொண்ட மூன்று இலங்கையர்களை இந்திய குடிவரவு அதிகாரிகள் புதன் கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

யோகராசா வசந்தராசன், மற்றும் அச்சுதன்பிள்ளை பாலசந்திரன் இவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் கனடாவின் டொரண்டோ மற்றும் மலேசியா நோக்கி பயணமாக இருந்ததாகவும் முன்னதாக இவர்கள் இருவரும் தமக்கிடையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை கைமாற்றி கொண்டுள்ளதாகவும் இந்திய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுதபிளளையின் கடவூட்சீட்டையும் போர்டிங் பாசையும் பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள்,அவரிடம் யோகராசா வசந்தராசன் என்ற பெயரில் கடவூச்சீட்டை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை தர்மராஜா தேவானந்தன் என்பவர் நவரட்ணம் பாலேந்திரன் என்ற பெயரில் உள்ள கடவூச்சீட்டை வைத்திருந்ததாகவும் அவர் கோலாலம்பூர் செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டையை பெற முயன்றதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேறு ஒருவரிடம் இருந்து இவர் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டையை பெற திட்டமிட்டிருக்காலம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று இலங்ககையரும் தமிழக காவல்துறையினரிடம் விசாரணைகளுக்கான ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments: