பொதுநலவாய நாடுகளின் இளம் அமைச்சர்களின் மாநாடு கொழும்பில்
நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பில் உள்ள சினமன் கிரேண்ட் நட்சத்திர விடுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைமைய செயலாளர் மற்றும் 53 உறுப்பு நாடுகளின் இளம் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனை தவிர சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை முன்னனிட்டு 5 ரூபா பெறுமதியான தபால் தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 25 April 2008
இளம் அமைச்சர்களின் மகாநாடு - கொழும்பில்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment